தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமாகி, அடுத்தடுத்து அவரது படங்களிலே நடித்து வந்த விஜய் பின்னர் அவரது அப்பா இயக்கும் படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்து, பின்னர் தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.
இந்த வருட பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூல் ரீ தி யி ல் சாதித்தது என்றே சொல்லலாம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லி யோ என்ற படத்தில் நடித்து கொண்டுள்ளார் விஜய். இந்த படத்தில் த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளனர்.
சமீப காலமாக விஜய் தனது அப்பா அம்மாவை ம தி க் கா ம ல் இருக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும் நிலையில் நடிகர் விஜய் தனது அம்மாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.
இப்படியிருக்கையில் தனது அம்மா அப்பாவின் 50 ஆவது திருமண நாளை கொண்டாட விஜய் அங்கு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி இருக்கையில் விஜயின் மனைவி வருவாரா என்ற கேள்வியும் பலரால் இணையத்தில் வரத்தான் செய்கிறது.