எந்த நடிகரின் கல்லறையிலும் எழுதப்படாத ஒரு வாசகம்… நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வாசகம் என்னவென்று தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நம்மை சிரிப்பால் மயக்கிய பிரபல நடிகர் குமரிமுத்து. இவரின் கல்லறையி ல் எழுதப்பட்டுள்ள வாசகம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை மந்த வெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் கல்லறைக்கு அருகிலேயே பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார். அப்போது இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில் நான் பார்த்த கல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையும் ஒன்று.

மேலும் இயக்குநர் மகேந்திரன் இயக்கிய திரைப்படங்களில் குமரி முத்துக்கு மிகச் சிறப்பான வேடங்களில் நடித்திருப்பார். இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் அடங் கினார்கள். நடிகர் குமரி முத்துவின் கல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter) ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது கல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரி முத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த கற்பனை திறன் வியக்க வைத்தது என பதிவிட்டிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *