பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடிக்கும் பாக்கியாவிற்கு ஆரம்பத்திலிருந்து நல்ல வரவேற்பு உள்ளது. பாக்கியா தான் இந்த சீரியலின் கதாநாயகி என்பதால் இவரின் ட்ரோலுக்கு தனி மரியாதையும் உள்ளது.
தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்தாலும் அவரை எதுவும் சொல்லாமல் அவர் போக்கில் விட்டு தன்னுடைய வேலைகளை பார்க்கும் பாக்கியாவின் தைரியம் இல்லத்தரசிகளின் இதயங்களை வென்றுள்ளது. இந்த நிலையில் பழனிசாமியுடன் வீட்டிற்கு சென்று பாக்கியா அவருடைய அம்மாவை பார்த்து வந்துள்ளார்.
இதனை அந்த வழியில் சென்ற கோபி பார்த்து விட்டு புலம்பிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ராதிகா என்னை இந்த வீட்டில் எந்த வேலையும் உங்க அம்மா செய்ய விட மாட்டிறாங்க.என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபி பாக்கியாவை தரம் குறைவாக பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த செழியனும் எழிலும் கோபியை அடிக்க வந்துள்ளார். இந்த காட்சியை பார்த்த ராதிகா பயந்து போய் நின்றுள்ளார். இந்த காட்சியை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்கும் என ரசிகர்கள் எதிர் பார்க்கப்படுகின்றன.