அட ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளனர் தெரியுமா ?? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தவர் தொகுப்பாலினி மகாலட்சுமி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் தடம் பதித்தார் அதன் பிறகு பல சீரியல்கள் நடித்து தன்னுடைய கேரியரை உயர்த்திக் கொண்டார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார் அந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்லாமல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்த காதல் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இருக்கும் புகைப்படங்களை விஜே மகாலட்சுமி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
இருப்பினும் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யாமல் தனியாக இருக்கும் புகைப்படத்தை மகாலட்சுமி பதிவு செய்தது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் எழுப்பி வருகின்றனர்.