திரையுலகில் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்ட தம்பதிகள் தான் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் சில நாட்களுக்கு முன் இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. தொலைக்காட்சிகளில் வி.ஜே வாக பணிபுரிந்து வந்த மகாலட்சுமி அதன் பின் சீரியலில் நடித்து வந்தார்.
மேலும் இவர் ஏற்கனவே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நடிகை மகாலஷ்மி திடீரென யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமத்திற்கு பிறகு அடிக்கடி இவர்கள் எங்கேயாவது சென்று ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.
ரவீந்திர் சமீபத்தில் தனியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் சோகமான ஒரு தலைப்பை பதிவிட்டிருந்தார். இதனால் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதியினர் விவாகரத்து செய்துக் கொண்டார்களா என்ற தகவல் பரவி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.
அதில் டேய் “புருஷா” இன்ஸ்டாகிராமில் உனது தனிப் படத்தைப் பதிவேற்ற வேண்டாம். என்று எத்தனை முறை கூறியிருக்கிறாய். மீண்டும் முழு சமூக ஊடகங்களும் பிரிந்து விட்டதாக சொல்கிறது. இனிமேல் இந்தத் தவறை மீண்டும் செய். எனக்கு பிடித்த சேமியா உப்மா 3 வேளை உணவாக எப்போதும் கிடைக்கும். யூடியூப் கிசுகிசு குழுவுக்கு என் மைண்ட் வாய்ஸ் – இன்னும்டா நாங்க ட்ரெண்ட்…இதுக்கு இல்லையாடா ஒரு முடிவு… என நக்கலாக பதிவிட்டிருக்கிறார்…