விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரூமில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். மறுப்பக்கம் செழியன் மாலினியை சந்திக்க மாலினி இன்னொரு முறை ப்ராஜெக்ட் பற்றி முழுசா சொல்லுங்க எனக்கு சில சந்தேகம் இருக்கு என்று கூறுகிறார்.
செழியன் இது என்னுடைய ஃபேமிலி டைம் வீட்டுக்கு போகணும் என கூறியும் மாலினி இன்னைக்கு ஒரு நாள் லேட்டா போங்க எனக்கு டைம் இருக்கு என்று செழியனை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய அப்போது ஜெனி போன் செய்து எங்க இருக்க நான் இன்னும் சாப்பிடாம உனக்காக காத்திருக்கிறேன் என்று கூற உடனே செழியன் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அதைத் தொடர்ந்து இனியா போதும் டாடி காலையில படிக்கலாம்.
என்று கூற சரி காலையில ஆறு மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம் என கோபி சொல்ல அவ்வளவு லேட்டாவா நான்கு மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம் அப்பதான் சரியா இருக்கும் என இனியா ராதிகாவுக்கு ஷாக் கொடுக்கிறார். அதன் பின் செழியன் தூங்காமல் இருக்க ஜெனி என்னாச்சு என கேட்க மாலினி பற்றி சொல்ல ஜெனி எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு, நீ ரொம்ப ரொம்ப நல்ல பையன் என சொல்லி செழியனை சமாதானம் செய்கிறார்.
அதன் பிறகு பாக்யாவும், இனியாவும் ஹாலில் தூங்கிக் கொண்டிருக்க இருப்பதை பார்த்து கோபி பரிதாபப்படுகிறார். பிறகு கோபி கிச்சனுக்கு செல்ல இனியா யாரோ உள்ள போன மாதிரி இருக்கு திருடன் வந்துட்டான் என பாக்கியாவை எழுப்பி விட பாக்கியா கிச்சனுக்கு சென்று கோபியின் மீது மோத இருவரும் பயப்படுகின்றனர். பிறகு கோபி சாரி கேட்டு விட்டு ரூமுக்கு செல்கிறார்.
மேலும் மறுநாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி தயாராக இருக்க கோபி நான் கூட்டிட்டு போய் விடுறேன். என வந்து இனியாவை அழைத்துக் கொண்டு கிளம்பும் போது ராதிகா எங்க போறீங்க என கேட்கிறார். இனியாவுக்கு 12th எக்ஸாம் ஸ்டார்ட் ஆயிடுச்சுல அவள ஸ்கூல்ல விடப்போறதாக கோபி சொல்ல நான் மயூவ ஸ்கூல்ல விட சொல்லலாம்னு இருந்தேன். இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்று சொல்ல கோபி இனியாவுக்கு சீக்கிரம் போகணும் நான் போயிட்டு வரதுக்குள்ள மயூவுக்கு லேட் ஆகிடும்.
என்ன செய்வது என கேட்க ராதிகா இனியாவ கூட்டிட்டு போய் விடுவதற்கு இங்கே இவ்வளவு பேர் இருக்காங்க, மயூராவை கூட்டிட்டு போய் விட உங்க கிட்ட மட்டும் தானே கேட்க முடியும் என ராதிகா பேச ஈஸ்வரி அவன் பொண்ண அவ ஸ்கூல்ல கூட்டிட்டு போய் விட கூட உன்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா என சத்தம் போடுகிறார்.
ஏன் லா எல்லாம் பேசுவாளே உங்க அம்மா அவளை கூட்டிட்டு போய் விட சொல்ல வேண்டியது தானே என திட்ட பாக்கியா எழிலுக்கு போன் செய்து வரவைத்து இனியாவை அவரோட அனுப்பி வைக்க ராதிகா மேல வாங்க கோபி என கோபியை கூட்டிச் சென்று மேலே செல்கிறார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது…