பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் திடீர் அனுமதி… என்ன காரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90 -களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் 1992 -ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியான “செம்பருத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.  சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபகாலமாக முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். நடிகை ரோஜாவுக்கு கால் வீக்கம் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *