தென் கொரியாவை சேர்ந்தவர் பார்க் சூ ரியன் (Park soo ryun). 29 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன டெனர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மேலும் இதனைத் தொடர்ந்து பல கொரிய மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஜெஜு தீவிற்கு சென்றுள்ளார்.
அங்கு மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவியை இழந்துள்ளார். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மூளைச்சாவு ஏற்பட்ட பின் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், பார்க் சூரியனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர். புகழ்பெற்ற கொரிய நடிகையான பார்க் சூ ரியன், 29 வயதில் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…