தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர். இவர் சமீபத்தில் தான் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் அவர் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் வெளியிட்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் தொகுப்பாளினி அஞ்சனா காதல் குறித்து சுற்றி வளைத்து கேள்வி கேட்டார்.
அதற்கு அதிதி ஷங்கர் நான் காதலிக்கவில்லை. நான் ஷங்கர் மகள் என்று தெரிந்தால் எந்த ஒரு பையனும் என்கிட்ட வந்த பேச மாட்டார்கள். அப்பா நான் உன்னோட பொண்ணு பா என்று நடிகை அதிதி ஷங்கர் பதில் கூறியுள்ளார்…