சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் தேவராஜ் படேல் (22). இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும் இவர் சினிமா பஞ்ச் வசனங்களை பேசுவது, சமைப்பது, வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்வது, நண்பர்களுடன் சேர்ந்து காமெடி செய்வது என யூடியூபையே இவர் ஒரு கலக்கு கலக்கி வந்தார். யூடியூப் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் குவியத் தொடங்கின.
அவரது யூடியூப் சேனலுக்கு 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாவில் 57 ஆயிரம் ஃபாலோவர்ஸ்களும் உள்ளனர். இன்று மதியம் ஒரு புதிய வீடியோ எடுப்பதற்காக தனது நண்பனுடன் தேவராஜ் படேல் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கில் சென்ற போது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேவ்ராஜ் படேல் மறைவுக்கு சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கோடிக்கணக்கான மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து நம்மை சிரிக்க வைத்த தேவ்ராஜ் படேல் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்…