தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய மகன் சஞ்சய். இவர் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் குறும் படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார்.
இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வரும் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. இதை விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை தனது மகளுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைக்க ஆசை என நடிகை தேவயானியின் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
நடிகை தேவயானி – ராஜகுமாரன் ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மகள் இனியா என்பவர் சமீபத்தில் தான் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இப்படியொரு நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளாராம்.
இந்த படத்தின் மூலம் தனது மகள் இனியாவை கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ள ராஜகுமாரன் கதாநாயகனாக விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். கடந்த 1999ஆம் ஆண்டு நீ வருவாய் என படத்தில் தேவயானியுடன் இணைந்து அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருந்தனர்.
ஆனால் சில காரணங்களால் விஜய் இந்த படத்திலிருந்து வெளியேறி விட்டதால் அந்த ரோலில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார்…