சின்னத்திரையில் பல சீரியல்களில் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி. இவர் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2 போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
வெள்ளத்திரை நடிகைகளை விட கிராமத்தின் மூலை முடுக்குகளில் கூட பிரபலமாகி விடுகின்றனர் சின்னத்திரை நாயகிகள். மேலும் அந்த வகையில் பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி.இவரது கணவர் யுவராஜ் நடனம் ஆடுவதில் வல்லவர்.
காயத்ரி- யுவராஜ் தம்பதிக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். 5 மாதமாக உள்ள காயத்ரிக்கு, சமீபத்தில் தான் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் அவரது கணவர்.
மேலும் இந்நிலையில் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது தேவையா கொஞ்சம் கவனமாக இருங்க என பதிவிட்டுள்ளனர்….
View this post on Instagram