திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்து இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை தான் ஷில்பா ஷெட்டி. தமிழில் நடிகர் பிரபு தேவாவின் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பாலிவுட் பக்கமே திரும்பினார்.
தற்போது 44 வயதாகும் நடிகை ஷில்பாவிற்கு 2009ல் ராஜ் குண்ரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 7 வயதில் வியான் குந்த்ரா என்ற மகன் உள்ளார். தற்போது கணவரின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் வழியில் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் பிப்ரவரி 15ல் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பெற்றெடுத்ததை மகிழ்ச்சியுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமுகவலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்…