லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்களா? அட இந்த பிரபலம் தான் இவரது மகளா? வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் சந்தித்த பிரச்சனைகள் கேலி கிண்டல்கள் அதிகம். ஆனால் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

குணசித்திர வேடங்களாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு. நடிப்பதில் மட்டுமில்லை இவர் ‘அம்மணி’,நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஆ ரோகனம்’ ‘ஹவுள் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டு ஒரு லைம் லைட்டிலேயே இருப்பவர் இவர். எந்த ஒரு பிரச்சனைக்கும் தைரியமாக குரல் கொடுப்பவர். சமீபத்தில் ஆடை படம் குறித்து அமலா பாலை விவாத்திற்கு அழைத்தார். சமூகவலைத்தளங்களில், யூடியூப்பில் லட்சுமி ராமகிருஷ்ணனின் டாக் எப்போதுமே வைரல் தான். இவ்வளவு சீரியஸான நபரான லட்சுமி உண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் போது பாசக்கார அம்மாவாக தான் எப்போதுமே இருப்பார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர் அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் IITல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார். இதனால் தனது 16 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார். பின்பு தனது மூன்று செல்ல மகள்களின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார்.

ஓமன் நாட்டில் இருந்த போது அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் லட்சுமி.அங்குள்ள பெண்களின் திறமையை வளர்க்க ஒரு பவுண்டேசனை துவங்கி அவர்களுக்கு திறமையை வளர்க்கும் பவுண்டேசனை பயிற்சிகளை கொடுத்து வந்தார்.

மேலும் இதனால் ஓமன் நாட்டின் விருதினையும் பெற்றுள்ளார். 2005ல் இருந்து 6 ஷார்ட் பிலிம்களை இயக்கினார்.லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் இன்றளவு யூடியூப்பில் இந்த நிகழ்ச்சியின் எபிசோடுகளை தேடி பார்ப்பவர்கள் உண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *