எதிர்நீச்சல் சீரியல் அப்பத்தா-வின் நிஜ வாழ்க்கை என்னவென்று தெரியுமா?? இதோ வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்…!!

சினிமா வைரல் வீடியோ

தற்போது டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் தொடர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரில் அப்பத்தாவாக பட்டமா ரோலில் நடிக்கும் பாம்பே ஞானம் அவர்களின் நிஜ வாழ்வில் நடந்துள்ள சம்பவங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பும் சீரியல்களுக்கு என்று தனி ஒரு மவுசு உண்டு.

அதில் ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்து வாய்யை திறக்காமல் தற்போது பேச தொடங்கிய ஒரு கதாபாத்திரம் தான் பட்டம்மாள் கதாபாத்திரம். சீரியலில் தான் இவர் சிங்கப்பெண் என்று பார்த்தால் நிஜத்திலும் இவர் சிங்க பெண் தான். அதாவது 14 வயதிலேயே இவருக்கு திருமணம் நடந்துள்ளது.

இருப்பினும் வீட்டிற்குள் முடங்காமல் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். தனது 40 வயதுக்கு மேல் தான் நாடக துறையில் ஈடுபட்டிருக்கிறார் பாம்பே ஞானம். மேலும் பெண்களை வைத்து ஒரு நாடக கம்பெனி ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

இவருக்கு மிக உறுதுணையாக இருந்தது இவர் கணவர் தானாம். ஆனால் சில வருடங்கள் கழித்து ஏற்பட்ட இவரின் கணவரின் இறப்பு இவரை படுமோசமாக பாதித்துள்ளது. இருப்பினும் மனம் தளராமல் புத்தகங்களின் உதவியோடு மீண்டு வந்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து கலக்கி வருகிறார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *