தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஜவான் படம் மற்றும் பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஜவான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்று வளர்த்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார். அப்போது விக்னேஷ் சிவன் ஒரு கண்டீசனை போட்டிருக்கிறார். அட்லீ ஜாவன் படத்தில் நடிக்க கேட்டதும், பாலிவுட் சென்று விட்டால் திருமணத்திற்கு தாமதமாகும் என்பதால், நீ எங்கு வேணாலும் போ, ஆனால் என்னை திருமணம் செய்து விட்டு அதை செய் என்று கண்டிஷன் போட்டதாகவும் அதன் பின் தான் திருமணம் முடிந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது.
ஜவான் படத்தில் நடித்திருந்தால் குடும்ப பொறுப்பை கவனித்து கொண்டு வருகிறார். அப்படி இருக்கும் போது பாலிவுட் சென்றால் அடுத்தடுத்த வாய்ப்பு வரும் போது சம்பளத்தை உயர்த்தவும் திட்ட மிட்டிருக்கிறாராம் நடிகை நயன்தாரா…