பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். TRPயில் சமீபகாலமாக இந்த சீரியல் தான் பட்டையை கிளப்பி வருகிறது. மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி நடித்து வருகிறார்.
மேலும் இவர் இந்த சீரியலில் ஜீவானந்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் தான் தற்போது சீரியலை விறுவிறுப்பாக எடுத்து செல்கிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா.
இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்துடன் இணைந்து வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார். 41 வயதாக்கும் நடிகை கனிகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.
தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள். ஜிம் ஒர்கவுட் மற்றும் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் சீரியலில் வரும் வாயடைத்து போயுள்ளனர்…