திரையுலகில் மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேன். இவர் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகை லட்சுமி மேனன் நடித்த முதல் படத்திலேயே பிரபலமானார்.
அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையாததால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இவர் சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் நடிகை லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாப்பிள்ளை பிரபல நடிகர் என்றும் அது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் விஷால் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை..