காமெடி நடிகர் வடிவேலுவுடன் காதல் கி சு கி சு.. வைகைப்புயலுடன் பல படங்களில் நடித்து மாட்டிக்கொண்ட பிரபல நடிகை யாரென்று தெரியுமா ?? இதோ ..!!பிரபல முன்னணி காமெடி நடிகர் வடிவேல் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை சேர்ந்தவர்.இவர் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.
தொழில் ரீதியாக காமெடி நடிகர் வடிவேலு ஒரு இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான இவர் தமிழ் சினிமாவில் துணை மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2000களில் கோலிவுட்டில் பரவலான பாராட்டைப் பெற்றார்.
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நெருப்பு கூத்தடிக்குது பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை லேகா ஸ்ரீ.நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தார். சமீபத்தில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் காதலில் இருந்த நபர் யார் என்ற கேள்விக்கு என் கணவர் தான் என்று சிரிப்புடன் கூறினார்.
நானாக இருந்தேன் என்றால் காதலர் யாரென்று மறைக்காமல் கூறிவேன் என்று ஷகிலா பட்டென்று கூறினார். அதன்பின் காதல் கிசுகிசு பற்றி கேட்டதற்கு,
நானும் வடிவேலு சாரும் காதலிப்பதாக பலர் என்னிடம் செய்தியை பார்த்ததாக கூறினார்கள் என்று லேகா ஸ்ரீ கூறியுள்ளார்.மேலும் வடிவேலு சார் எனக்கு நண்பர். ஒரு படத்தில் நடித்த போது என் அண்ணன் இறந்த விசயம் வடிவேலு சாருக்குத்தான் தெரிய வந்தது. ஆனால் நான் ஷூட்டிங்கில் இருந்தேன்.என்னிடம் அதை எப்படி கூறுவது என்று 2 மணி நேரம் தயங்கி அதன்பின் கூறி வழி அனுப்பி வைத்தார் வடிவேலு என்று கூறியுள்ளார் லேகா ஸ்ரீ.