பிரபல தொலைக்கட்சியான சன் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக கயல் சீரியல் உள்ளது. இந்த சீரியலில் தற்போது எழில் திருமண காட்சிகள் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கயல் கடத்தப்பட்ட நிலையில் அவரை எழில் காப்பாற்றி கூட்டி வருகிறார்.
மேலும் அதன் பின் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு வில்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிறார். இல்லையென்றால் கன்னத்தில் அரை வாங்கி கொள்ளும்படி கூறுகிறார். இது நடக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என எழில் கூறியதால் மன்னிப்பு கேட்கின்றனர்.
அதன் பின் திருமண சடங்குகள் தொடங்கி நடக்கிறது. தாலியை எல்லோரும் ஆசிர்வதித்து கொடுக்க அதை மாப்பிள்ளை எழில் கையில் கொடுக்கிறார் ஐயர். அதோடு இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெண் கழுத்தில் கட்டாமல் பின்னால் இருக்கும் கயல் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார் எழில்.
மேலும் இது நடக்கும் என எதிர்பார்த்தது தான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இது கனவு என நாளைய எபிசோடில் காட்டிடாதீங்க என சிலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்…