இதயத்தில் 2 ஓட்டை, 3 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை… பிரபல நடிகையின் குழந்தைக்கு நடந்த சோகம்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சச்சின். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பிரபலமானவர் தான் நடிகை பிபாஷா பாசு. இவர் தமிழில் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார்.

மேலும் இவர் கடந்த 2016ம் ஆண்டு கரண்சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தனர். கடந்த நவம்பர் 12ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அவரது குழந்தைக்கு அவர் தேவி என்று பெயர் வைத்தார். அவரது குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலம் குறைவாக இருந்ததால் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்த போது தான் அவரது மகளுக்கு இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பது தெரியவந்தது.

இதனால் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று நடிகை பிபாஷா பாசு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது அவரது குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தி உள்ளதாகவும் மருத்துவரின் உதவியால் தனது மகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் உங்கள் குழந்தை நலமாக இருப்பார் கவலைப்படாதீர்கள் என்று கூறி வருகின்றனர்…

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *