தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் தான் அதிதி சங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான விருமன் திரைப்பதத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை அதிதி ஷங்கர்.
இவர் நடித்த முதல் படத்திலேயே பிரபலமானார் அதிதி ஷங்கர். முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சமீபத்தில் நடிகை அதிதி ஷங்கர் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக பேசிய அதிதி, “நான் உற்சாகமாக இருக்கிறேன்.
எனக்கு மாப்பிள்ளை யார் என்று தெரிய வேண்டும்” என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி நடிகை அதிதி ஷங்கர் வைத்திருக்கிறார்..