பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் மாறி குளோபல் வில்லேஜர்ஸ் புதிய தயாரிப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
முதன் முதலில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியும் தொடங்கி சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை மீனா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் ஒரு சிறுமி மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா என்று முத்து பட டயலாக்கை பேச அதற்கு மீனாவும் அந்த சிறுமியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார்…