திரையுலகில் சமீபகாலமாக பல நடிகர்கள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இதில் சித்தார்த் சுக்லா மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோருக்குப் பிறகு பிரபல இந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர் பவன் தனது 25 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மேலும் இவர் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்திருக்கிறார். பவனின் உடல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவருக்கு அவரது குடும்பத்தினரால் இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன..