தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் 80, மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். முருகைகாய் என்று கூறினாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது இவரை தான். இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை பூர்ணிமா பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். ஆரம்ப கால சினிமாவில் பாக்யராஜ் தன்னுடன் நடித்த நடிகை பிரவீனாவை திருமணம் செய்துக்கொண்டாராம்.
சினிமாவில் 1976 மன்மத லீலை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார். பிரவீனா. இதையடுத்து 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே மரணமடைந்தார் பிரவீனா. அதன் பின் ஒரே வருடத்தில் நடிகை பூர்ணிமாவை பாக்கியராஜ் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.