நடக்கவே முடியாமல் பரிதாப நிலையில் விஜே கல்யாணி!! அவருக்கு என்ன ஆச்சு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி, அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பின் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நடக்க முடியாமல் செவிலியர்கள் உதவியால் நடந்து வருகிறார். அதில் அவர் நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016ம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது. சிறிது காலம் நலமாக இருந்தேன். அதன் பிறகு தான் எனக்கு நவ்யா பிறந்தாள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என் முதுகுத் தண்டுவட நிபுணரிடம் ஆலோசனை செய்தேன்.

அப்போது அவர் இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை. இதனால் இந்த முறை ஸ்க்ரூவை அகற்றி விட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். ஸ்க்ரூக்களை அகற்றி வேறொருவரோட எலும்பை பயன்படுத்த வேண்டும் என்று கூறினர்.

இந்த முறை குணமடைய வெகு நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நின்றார். 5 வயது என் மகள் நவ்யா என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை. என்று கூறியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *