தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை திரிஷா. இவர் நடிகர் சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக நடிகை திரிஷா உள்ளார்.
அவர் திருமணம் செய்து கொள்ளாமால் இருப்பதன் காரணத்தால் இவருக்கு அதிகமான பட வாய்ப்பு வரத் தொடங்கி இருப்பதாக கூறுகின்றன. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நடிகை திரிஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலரும் திருமணம் செய்ய போகிறாரா என்று பலரும் பல கேள்விகளை கேட்டு வருகின்றார்கள். ஆனால் இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…