சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகி இருப்பவர் தான் கவின். இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்ய போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி இன்று காலை கவின் – மோனிகா திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், கவின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. கவினின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..