பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் டாப் 3 சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்தது தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இதற்கு முன் ராஜா ராணி சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு விணு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மேலும் இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். இனி அவருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை அக்ஷிதா அசோக் தான் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகை அக்ஷிதா அசோக் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டு இருக்கிறார்…