தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகை மீனா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
மேலும் இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா எனக்கு ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும். என்னுடைய திருமணத்திற்கு முன் என் அம்மாவிடம் எனக்கு ஹ்ரித்திக் ரோஷன் போல மாப்பிள்ளையை பாருங்க என்று கூறி இருந்தேன்.
நான் ஹ்ரித்திக் ரோஷனின் மிக பெரிய ரசிகை. அவரின் நடிப்பு, நடனம் எல்லாமே நன்றாக இருக்கும். என்று கூறியுள்ளார்..