தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் 90ஸ் காலக்கட்டத்தில் நடித்த நடிகை சுகன்யா. இவர் தமிழில் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் இந்தியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்.
இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் திருமணமான ஒரே வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை சுகன்யாவிற்கு தற்போது 50 வயது ஆகிறது.
ஒரு பேட்டியில் சுகன்யாவிடம் மறுமணம் குறித்து கேட்ட போது அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை. எனக்கு இப்போது 50 வயது ஆகிறது. இனி கல்யாணம் குழந்தை என்று வந்தா அந்த குழந்தை என்னை அம்மா அல்லது பாட்டி கூப்பிடனுமா என்று நானே யோசிப்பேன். நான் மறுமணம் வேண்டும் என்றும் சொல்லவில்லை. என்று கூறியுள்ளார்..