என்னாது .. நடிகர் சிம்பு திருமணத்திற்கு ரெடியா ?? தனது காதல் பரிசை கொடுத்த பிரபல நடிகை யாரென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!!! நடிகர் சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’ ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பின் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தில், கதாநாயகியாக நடித்திருந்த சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் தெரிவிக்கையில், “காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு, “அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தகுதியான ‘பேச்சிலர்’ சிம்புதான் என்று. எனவே காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்” என தெரிவித்தார்.மேலும், சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.