பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது மூவரும் கூட்டணியாக ஒன்று சேர்ந்து குணசேகரனுக்கு எதிராக களத்தில் இறங்கி விட்டார்கள். அதாவது அப்பத்தாவை வைத்து ஜீவானந்தத்திற்கு எதிராக புகார் கொடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று குணசேகரன் திட்டம் போட்டுள்ளார். அதை தவிடு பொடியாக ஆக்குவதற்கு அப்பத்தா துணிந்து விட்டார்.
மேலும் அந்த வகையில் யாருக்கும் தெரியாமல் அப்பத்தா வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார். இங்கே வீட்டில் இருப்பவர்கள் அப்பத்தாவை காணோம் என்று தேடி வருகிறார்கள். பிறகு ஜனனி தான் அப்பத்தாவை வீட்டுக்குள் மறைத்து வைத்திருப்பார் என்று ஜனனி இருக்கும் வீட்டிற்குள் ஞானம் தேடப் போகிறார். ஆனால் அப்பத்தா இங்கே இல்லாமல் நேரடியாக நீதிபதியை பார்த்து பேசுவதற்கு போய் விட்டார். இவருடன் ஜனனியும் கைகோர்த்து நடந்த எல்லா விஷயத்தையும் நீதிபதி முன் வாக்குமூலம் கொடுக்கிறார் அப்பத்தா.
அந்த நேரத்தில் ஜீவானந்தமும் என்டரி கொடுக்கிறார். ஆக மொத்தத்தில் அப்பத்தா, ஜனனி, ஜீவானந்தம் மூன்று பேரும் துணிந்து களத்தில் குணசேகரனுக்கு எதிராக இறங்கி விட்டார்கள். இவர்களின் காம்போவை பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கிறது. ஜீவானந்தத்தின் பெயரை கேட்டதும் நீதிபதி இந்த பேர் எனக்கு கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. என்று சொல்ல, அதற்கு அப்பத்தா ஜீவானந்தம் ரொம்ப நல்லவர்.
அவரைப் பற்றி உண்மைகள் அனைத்தையும் சொல்லுகிறார். அடுத்த படியாக இவர்களுக்கு உறு துணையாக நீதிபதி உதவி செய்ய தயாராகி விட்டார். இப்படி இவர்கள் மூவரும் நீதிபதியிடம் பேசிய பிறகு வெளியில் வந்து பார்த்தால், அங்கே குணசேகரன், ஆடிட்டர், மற்றும் ஞானம் வருகிறார்கள். அப்பத்தாவை இந்த இடத்தில் எதிர்பார்க்காத குணசேகரன், நீ என்ன பழி வாங்குறியா, நான் அழுஞ்சாலும் அழிவேன் ஆனால் அதற்கு முன் உங்கள் அனைவரையும் அழிச்சிட்டு தான் அழிவேன் என்று சவால் விடுகிறார்.
இனி குணசேகரன் என்ன தான் சவால் விட்டு குட்டி கரணம் அடித்தாலும் இவரால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஒட்டுமொத்தமாக அப்பத்தா, குணசேகரன் கனவை தரமட்டமாக ஆக்குவதற்கு எல்லா வேலையும் கச்சிதமாக செய்து வருகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்கள் சொந்த காலில் நிற்பதற்கு தயாராகி விட்டார்கள். இனி குணசேகரன் செல்லாக்காசாக இருந்து ஒவ்வொரு நாளும் அவமானத்தை சந்திக்கப் போகிறார்..