தற்போது இருக்கும் காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக சன் டிவியின் மூலம் தனக்கென அடையாளத்தை ஏராளமானவர்கள் பிடித்து வருகிறார்கள்.
மேலும் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் ரோஜா. அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பொழுது தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா மூன்றாம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானார்.
அதன் பின் இவர் தான் காதலித்தவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தனது வாழ்வில் நடந்த பல கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். என்னுடைய அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் எங்களிடம் பணம் கூட இல்லை.
ஒரு அரை மட்டுமே இருக்கும் வீட்டில் நாங்கள் மொத்தம் ஐந்து பேர் இருப்போம். நாங்கள் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டு கூட வாழ்ந்து உள்ளோம் என்று தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல கஷ்டத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்…