பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் நெஞ்சங்களை வென்ற இந்த சீரியல் 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா சீரியலிருந்து விலகப் போவதாக கூறியுள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து சீரியல் குழுவினர் சுஜிதாவிடம் பேசியுள்ளார்கள். கடந்த 5 வருடங்களாக நடிகை சுஜிதாவின் சம்பளம் உயர்த்தப்படாத நிலையில் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் சம்பள உயர்வு குறித்து பேசிய போது மீண்டும் சீரியலில் சுஜிதா நடிக்க போவதாக கூறி விட்டாராம்.
இதனை தான் நேரம் பார்த்து செய்வது என கூறுவார்களோ. என அங்கிருந்தவர்கள் முனுமுனுத்து வருகிறார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகிய போது இணையவாசிகள் ஒரு நிமிடம் பதறியுள்ளார்கள்..