பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் 4அண்ணன், தம்பிகள் கூட்டுக் குடும்பம் போன்ற விஷயங்களை இந்த தொடர் அழகாக காட்டி வருகிறது.
மேலும் அண்மையில் பல தடைகளை தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிய வீட்டிற்கு சென்றுள்ளனர். அண்ணன்-தம்பிகளும் ஒன்றாகி விட்டனர். அடுத்து கதையில் கண்ணனுக்கு போன அரசு வேலை மீண்டும் கிடைக்குமா என்பது தான் கதைக்களமாக இருக்கிறது.
இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவர் இதே விஜய்யில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள கிழக்கு வாசல் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா படப்பிடிப்பு செட்டில் புதிய நபருடன் புகைப்படம் எடுத்து புதிய ஜீவாவா என பதிவு செய்துள்ளார். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என சிலர் உறுதியாக கூறுகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.