உளறித் தள்ளிய முரட்டு வில்லன்… வசமாக சிக்கும் வேட்டை நாய்.. குணசேகரன் கூண்டோட கைலாசம் செல்லும் நேரம் வந்துடுச்சு…!!

சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கதிரின் கொட்டத்தை அடக்குவதற்கு நேரம் வந்து விட்டது. அதாவது அப்பத்தாவை காணும் என்ற நிலையில் நீதிபதியிடம் நேரடியாக சென்று குணசேகரனை பற்றி ஒவ்வொரு விஷயங்களையும் புட்டு புட்டு வைத்து அவருடைய அராஜகத்தை அனைத்தையும் தெரியப்படுத்தி விட்டார். அத்துடன் ஜீவானந்தத்தின் மீது எந்த வித தவறும் இல்லை என்று அப்பத்தா நீதிபதியிடம் கூறி விட்டார்.

இதனால் ஜீவானந்தத்திற்கு எதிராக குணசேகரன் போட்ட திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாக விட்டது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத குணசேகரன், அப்பத்தா தனக்கு எதிராக திரும்பி விட்டார் என்ற விஷயத்தை புரிந்து கொண்டார். அதன் பின் கோபமாக கிளம்பிய குணசேகரனிடம் ஆடிட்டரும் வக்கிலும் இனி அவர்கள் இரண்டு பேரையும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

இதனால் கடுப்பான குணசேகரன் அவர்களை பாதியிலேயே நடு ரோட்டில் இறக்கி விட்டார். இனி குணசேகரன் என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் ஒவ்வொரு நாளும் தோல்வி நிச்சயம் அத்துடன் குணசேகரன் இனி என்ன நினைத்தாலும் ஜீவானந்தம் அப்பத்தாவை ஒன்னும் பண்ண முடியாது. அடுத்தபடியாக சைக்கோ வளவன் கதிருக்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது அவருடைய போனை குடும்பத்தில் இருப்பவர்கள் எடுத்து ஆன் பண்ணி விடுகிறார்கள்.

மேலும் யார் பேசுகிறார் என்பதை ஒட்டு மொத்த குடும்பமும் கேட்கிறார்கள். அதில் சக்தி ஹலோ என்று சொல்லியதும் வளவன், கதிர் குணசேகரன் சேர்ந்து செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் வாக்கு மூலம் மாதிரி ஒப்பித்து விடுகிறார். அத்துடன் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணமும் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்று உண்மையை உளறி விடுகிறார். இதைக் கேட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உரைந்து நிற்கிறார்கள்.

இவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார் வேட்டை நாய் கதிர். கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசின, ஆடுனா ஆட்டத்துக்கு மொத்தமாக ஆப்பு தயாராகி விட்டது. கண்டிப்பாக இந்த உண்மை தெரிந்ததும் ஜனனி சும்மா இருக்க மாட்டார். இவர்களுக்கு எதிராக போலீஸிடம் புகார் கொடுக்கப் போகிறார். அதற்கு முன்னணியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யப்போவது நந்தினி தான்.

நந்தினி வாக்குமூலம் கொடுத்து கதிரை குண்டுகட்டாக போலீசார் தூக்கி விட்டு ஜெயிலில் அடைக்கப் போகிறார்கள். பிறகு கதிர் மற்றும் குணசேகரன் இனி களி தான் திங்க போகிறார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களும் வந்து கொண்டிருக்கிறது. இனி தான் ஆட்டமே சூடு பிடிக்கப் போகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *