தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் இதே துறையில் இருக்கும் நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான விஷயமாக மாறி விட்டது.
அதுமட்டுமின்றி பல முக்கிய ஜோடிகள் இப்படி சின்னத்திரையில் இருக்கின்றனர். தற்போது விஜய் டிவி சிவா மனசுல சக்தி சீரியல் நடிகை ஜனனி பிரதீப் தற்போது இன்னொரு சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியலில் நடித்து இருக்கும் இனியன் என்பவரை தான் அவர் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது..