தமிழ் சினிமாவில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து அறிமுகமானர் நடிகை விஜயலட்சுமி. இவர் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் உள்ளது. மேலும் அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர், “சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார்.
என்று கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகாரளித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார்.
அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தானும், சீமானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கிறிஸ்தவர் என்பதால் தாலி கட்ட முடியாது என சீமான் கூறியதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். அதன் பின் பிரபாகரன் தலைமையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்கிறேன் என வாக்குறுதி அளித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து தன்னுடைய கருவை சிதைத்தார் என தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமின்றி தற்கொலைக்கு தூண்டுவதோடு தன்னைப் பற்றி தவறாக பல செய்திகளை பரப்புவதாகவும் கூறியிருக்கின்றார். அதோடு சீமானால் என் உயிருக்கு ஆபத்து, எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என அந்த பேட்டியில் நடிகை விஜயலட்சும கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் …