சற்றுமுன் 31 வயது பிரபல நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு… கதறி அழுத குடும்பம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் கடந்த 2005-ஆம் ஆண்டு ‘மாயூகம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா நாயர். மேலும் இவர் மேகதீர்த்தம், முத்துகௌ, அச்சாயன்ஸ், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், தெருவிளக்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி  ‘சந்தனமழை, தேவஸ்பர்ஷம் போன்ற ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரம் கரமனாவில் உள்ள அவரது வீட்டில் இவர் மயங்கிய நிலையில் உள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்கள் அபர்ணா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவரின் இறப்பு இயற்கைக்கு மாறானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இவரின் மரணத்திற்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *