தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை கெளதமி. இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இருப்பினும் இவர் மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர் லைஃப் அகெய்ன் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
நடிகை கவுதமி ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் தயமாயுடு என்ற படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பின் நடிகர் ரஜினியுடன் குருசிஷ்யன் படத்தில் தமிழில் நடித்தார். இதனை தொடர்ந்து நடிகர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்த போது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது.
மேலும் அதன் பின் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழில் அதிபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருமணம் ஆன இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 1999ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இருந்த விரிசல் காரணமாக சந்தீப் பாட்டியாவை பிரிந்து விவாகரத்தும் பெற்று கொண்டார்.
நடிகை கௌதமியன் பெற்றோரும் மரணம் அடைய தனித்து மகளுடன் வாழ்ந்து வந்த இவர். அதன் பிறகு கமலுடன் இருந்த நட்பின் காரண மாக 2005 ல் சேர்ந்து வாழ தொடங்கி 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளமல் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். தற்போது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார் கௌதமி.
காரணம் என்னவென்றால் மகள் வளர்ந்து விட்டதால் தனித்து வாழ்கின்றோம் என கூறியுள்ளார். தற்போது முதன் முறையாக கௌதமின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைபடம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு இவ்வளவு பெரிய மகளா என வாயடைத்து போயுள்ளனர்..