திரையுலகில் அட்லீ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட்டணி சேர்ந்திருக்கும் ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் படக்குழுவினர் எல்லோரும் கலந்துகொண்டனர். ஆனால் நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங். அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்கிற கொள்கையில் இருந்தாலும், அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு மட்டும் ப்ரோமோஷன் செய்வது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஜவான் படத்தின் ஹீரோயினாக நடிக்க முதலில் அட்லீ சமந்தாவை தான் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் நடிகை சமந்தா பல காரணங்களுக்காக அந்த வாய்ப்பை ஏற்க முடியாத சூழ்நிலை இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக தான் நடிகை நயன்தாராவுக்கு அந்த பட வாய்ப்பு சென்று இருக்கிறது…