விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நாஞ்சில் விஜயன். இவர் கலக்கப்போவது யார், சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவி மட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகிறார்.
மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்துள்ளது. நண்பர்கள் மூலம் தனக்கு அறிமுகமான மரியா என்ற பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களுடைய திருமணம் சென்னையில் விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனுக்கு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..