தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின் இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. இப்போது தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். கடந்த 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்றப் படம் தான் ‘துள்ளுவதோ இளமை’
இந்த படத்தில் நடித்த அபினய் என்பவருக்கு மிகவும் நல்ல பெயர் கிடைத்தது. பணக்கார வீட்டுப் பையன் லுக்கில் இருந்த அபினவ்க்கு இந்த படம் ரொம்பவும் நல்லபெ யரை வாங்கிக் கொடுத்தது. தனுஷ்க்கும் முன் இவருக்கு அடுத்தடுத்த சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அபினவ் ஜங்கன் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இதனால் திரீ ரோசஸ் போன்ற சில விளம்பரங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த தாஸ் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தார். அண்மையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்று அபினவை தேடிப் பிடித்து பேட்டி எடுத்துள்ளது. வெளி நாட்டுக்கு போய் வேலை செய்து விட்டு சமீபத்தில் திரும்பியிருக்கும் அபினவ் வயதான தோற்றத்தில் அடையாளமே தெரியாத நிலையில் உள்ளார்.
மேலும் அவரைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த அபினவ், இப்படி மாறிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்…