எதிர்நீச்சல் சீரியல் நடிகர் சக்திக்கு திருமணம் முடிந்ததா? நிஜ மனைவி இவங்க தான்… அவரது மனைவியின் புகைப்படம் இதோ…!!

சினிமா

தற்போது சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் வில்லனாக நடிக்கும் குணசேகரன் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

முதலில் அப்பத்தாவின் 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார். அதன் பின் ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் போட்டு அது வேறொரு பிரச்சனையை இழுத்துள்ளது.

இப்போது தனது மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி என்பதை தெரிந்துகொண்டு அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளார். ஈஸ்வரியை வெட்டி விட முடிவு எடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது அப்பத்தா போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குள் கெத்தாக நுழைகிறார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இந்த தொடரில் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு துணை போகாமல் தைரியமாக பேசி வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நடித்து வருபவர் தான் சக்தி. இவர் கதாபாத்திரம் பாசிட்டீவாக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

மேலும் இவர் கார்த்திகா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அதன் பின் இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். தற்போது அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *