பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா? யாருக்கும் சொல்லாமல் திருமணத்தை முடித்துள்ளார்… மணப்பெண் யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த திரைப்படம் கும்கி. இந்த படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் லட்சுமி மேனன் அறிமுகமானார் ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்தது.

இந்த படத்தில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்தார் . இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்த திரைபடத்தில் காமெடி நடிகர் அஸ்வின் நடித்து இருந்தார். இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். தயாரிப்பாளரான எல்.எம்.எம் சுவாமிநாதனின் மகன் தான் இந்த அஸ்வின்.

மேலும் இவர் முப்பொழுதும் உன் கற்பனைகள், வந்தான் வென்றான், நய்யாண்டி, நெடுஞ்சாலை ஆகிய பல படங்களில் நடித்திருக்கின்றார். கும்கி படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. தன்னுடைய பெயரை கும்கி அஷ்வின் என்று அவர் மாற்றிக்கொண்டார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடைய காதலியை விரைவில் அஸ்வின் திருமணம் செய்ய இருக்கின்றார்.

அமெரிக்காவில் படித்த வித்யஸ்ரீயும், அஸ்வினும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். விரைவில் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கின்றனர். என்ற செய்தி வந்த நிலையில் கொரோனா சூ ழல் காரணமாக அஸ்வினுடைய வீட்டில் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *