அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அவர்கள் மூலிகையை தான் பயன்ப்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போ இருக்கும் காலகட்டத்தில் அப்படி இல்லை. எது எடுத்தாலும் மருந்து, மாத்திரை தான். மூலிகைகளை நாம் தெரியாமலே அளித்து விடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன.
மேலும் அந்த வகையில் ஈரமான இடங்களிலும், விளை நிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகை தான், அம்மான் பச்சரிசி. இதில் இரண்டு வகைகள் உள்ளனர். சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி. ஆனால் மருத்துவ குணங்களும் ஒன்று தான். முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம். மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.
அம்மான் பச்சரிசி பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகை இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. மேலும் இது பூண்டு இனத்தைச் சேர்ந்தது.
மேலும் இவை வெண்ணிறமும்,செந்நிறமும் சேர்ந்து இருக்கும். இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. இந்த செடி பற்றி வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளலாம்…
வீடியோ இதோ…