பிரபல விஜய் டிவியின் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. இவர் மாகாபா ஆனந்துடன் பல ஆண்டுகளாக இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள்.
இவர் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதற்கான காரணம் என்னவென்று இதுவரை பிரியங்கா சொல்லவில்லை. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசனை மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, சமீபத்திய நிகழ்ச்சியில் எமோஷ்னலாக பேசி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதில் சனு மித்ரா என்ற போட்டியாளர் பாடி முடித்தப் பின் தன் தந்தை ஆடிஷனுக்கு அழைத்து வந்து விட்டு வீட்டுக்கு சென்ற போது விபத்தில் இறந்த விட்டதாக கூறி அனைவரையும் அழ வைத்தார்.
இதனை பார்த்த பலர் கண்ணீர் சிந்தினர். நடுவரான இசையமைப்பாளர் எஸ் தமனும் 9 வயதில் தன் தந்தையை இழந்ததாக கூறியும் சனு மித்ரா உனக்கு நாங்கள் எல்லோரும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்…
Vaaram ondru vendaam ivulagil meendum unnaku magalai pirakka vendum enbathai thavira??@Priyanka2804 #priyankadeshpande #supersingerjunior9 pic.twitter.com/0E8uKKlf8l
— AllAboutPapri (@allaboutpapri) September 4, 2023