சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்றைக்கு முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தொடர்ந்து தனது நெகடிவ் செயல்களால தேடி கொண்டவர் பிக்பாஸ் புகழ் ஜூலி.
மேலும் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகும் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அதில் இந்த முறை பலரையும் தனது ரசிகர்களாக மாற்றிக்கொண்டு நல்ல விமர்சனங்களை பெற்று வந்தார்.
தற்போது இவர் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி பல மாடர்ன் புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அதை பார்த்த பலரும் நடிகை ஜூலி ரகசியமாக திருமண செய்து கொண்டாரா என கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அது சீரியல்களுக்காக எடுக்கப்பட்ட காட்சி என தெரிய வந்துள்ளது…