கண் இமைக்குற நேரத்துல முடிஞ்சிடுச்சி… மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த நடிகர்!!

சினிமா

சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் கண்ணான கண்ணே, புலிவால் ஆகிய இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் ஆகியோரிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக இருந்துள்ளார். கவிஞர் வைரமுத்துவிடமும் சில வருடங்கள் உதவியாளராக இருந்துள்ளார்.

மதுரையிலிருந்து இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்து தனது கனவை நிறைவேற்றியவர். இயக்குனராக அவர் பிரபலமாகவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து அவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதே போல் திடீரென சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு மீம் மெட்டீரியலாகவும் மாறினார்.

இதனால் இப்போதுள்ள இளைஞர்களுக்கும் அவரை பிடித்துப் போனது. அவர் பேசும் ‘இந்தாம்மா ஏய்’ என்கிற வசனத்தை வைத்து பல மீம்ஸ்களும் உருவானது. ஒரு பக்கம், அதிக திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். அதோடு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானார். இப்படி பிஸியானதால் அவரின் உடல் நிலையை அவர் சரியாக பார்த்து கொள்ளாமல் போய் விட்டாரா என தெரியவில்லை.

இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேச சென்ற போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே உடனே மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்து விட்டார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களிடமும், சின்னத்திரை வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சின்னத்திர நடிகரும், எதிர் நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்து வந்தவருமான கமலேஷ் பேசும் போது ‘அவர் டப்பிங் பேசிவிட்டு வெளியே வந்த போது நான் உள்ளே சென்றேன். சரி காத்து வாங்க போகிறார் என நினைத்தேன். 10 நிமிடம் கழித்து அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். அவரின் மகள் எடுத்து ‘அப்பா இறந்து விட்டதாக சொல்கிறார்கள்’ என கதறி அழுதார்.  என்னால் நம்பவே முடியவில்லை. அருகிலேயே இருந்தேன். என்ன நடந்தது என ஒன்றுமே புரியவில்லை’ என கண்ணீர் விட்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *